திங்கள், 7 செப்டம்பர், 2015

நம் கல்லூாியின் இயற்பியல் துறையின் (1980-83) முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி 05.09.2015-ஆசிாியா் தினத்தன்று நடைபெற்றது.)

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 05-09-2015 அன்று அக் கல்லூரியின் இயற்பியல் துறையில் 1980-83 ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சங்கமம் முதன் முறையாக நடைபெற்றது. அந் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் க.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. 35 முன்னாள் மாணவர்களும் அக் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 15 பேராசிரியர் பேராசிரியைகளும் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் முன்னாள் மாணவர்களின் சார்பாக இயற்பியல் துறைக்கு ஒரு கணினியை நினைவுப் பரிசாக வழங்கினர். முன்னதாக திரு. குணசேகரன் வரவேற்புரை வழங்க திரு.சுகுமாரன் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் தற்போது பணிபுரியும் பேராசிரியை பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.



Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் புதிதாக 23 பாடப்பிரிவுகளை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு விண்ணப்பபடிவங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் புதிதாக 23 பாடப்பிரிவுகளை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு விண்ணப்பபடிவங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
தினத்தந்தி 06.09.2015


கல்லூரி முதல்வர் பேசுகையில், கல்லூரியில் கூடுதல் வகுப்பு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அதை ஏற்றுக்கொள்கிறேன். அதன்படி புதிய கட்டிடம் கட்ட 25 லட்சம் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

முன்னதாக நகரசபை தலைவர் ஆர்.குமரன், துணைத் தலைவர் சேவல்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கணினி துறை தலைவர் கீதா, தமிழ்துறை தலைவர் தமிழாழி கொற்கைவேந்தன் ஆகியோர் பேசினார்கள். விழாவில் கவுன்சிலர்கள் வி.பழனிசாமி, தமிழ்செல்வன், பஞ்சாயுதபாணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இயற்பியல்துறை தலைவர் மனோகரன் நன்றி கூறினார். 

இதன் தொடக்கவிழா கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் நா.விஸ்வநாதன் வரவேற்று பேசினார். விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு புதிய பாடப்பிரிவுகளை தொடங்கிவைத்து, 4 மாணவர்களுக்கு விண்ணப்பப்படிவங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

தொடக்க விழா

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக பி.எஸ்.சி. காணொலி தொடர்பியல், எம்..பொதுநிர்வாகம், முதுநிலை சமுகசேவையியல்(எம்.எஸ்.டபிள்யூ.) ஆகிய 3 பட்டப்படிப்புகளும், மற்றும் பல்வேறு பாடப்பிரிவுகளில் 20 பகுதிநேர மற்றும் முழுநேர எம்.பில்., பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.

கூடுதல் கட்டிடம் 
பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஒரேநாளில் அதுவும் ஆசிரியர் தினத்தில் புதிதாக 23 பாடப்பிரிவுகள் தொடங்கி இருப்பது மிகவும் சிறப்புடையதாகும். தனியார் கல்லூரிகளில் இருக்கக்கூடிய பி.எஸ்.சி.காணொலி தொடர்பியல் பாடப்பிரிவு போன்ற படிப்புகளும் தொடங்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதாகும். இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள், ஒரே குறிக்கோளுடன், காலத்தை உணர்ந்து, குறிப்பிட்ட நேரத்துக்கு கல்லூரிக்கு வந்து, பெற்றோரின் அறிவுரையை ஏற்று, ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களை நன்கு கவனித்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். 

கல்லூரி வளர்ச்சி நிதி
பின்னர் கல்லூரி வளர்ச்சி நிதியாக, கல்லூரி முன்னாள் மாணவர் தலைவரான வக்கீல் பாலகிருஷ்ணன் ரூ.5 ஆயிரத்தையும், முன்னாள் மாணவரான வங்கி அதிகாரி வேதவள்ளி ரூ.10 ஆயிரத்தையும் கல்லூரிக்கு வழங்கினார்கள்.

தினமலா் 06.09.2015

தி இந்து தமிழ் 07.09.2015 திங்கள்கிழமை







Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

சனி, 5 செப்டம்பர், 2015

பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தினம் சிறப்பாக 04.05.2015 வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.





         சர்வபள்ளி டாக்டர்.இராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா பெரியார் கலைக் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆசிரியர்களுக்கிடையேயான கவிதை, கிரிக்கெட், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, வட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.
         மாவட்ட அளவில் ‘அரசியல் சாசன அடிப்படை கடமைகள’; என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியில் பரிசு பெற்ற மாணவி பு.கவிஇலக்கியாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.ஜெ.சியாமளா எழுதிய “சீதையின் புத்ரிகள்” என்ற தலைப்பில் உள்ள நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர். முனைவர்.வ.நா.விஸ்வநாதன் நூலினை வெளியிட முதல்பிரதியை தமிழ்த் துறைத்தலைவர் முனைவர்.சு.தமிழாழிக் கொற்கை வேந்தன் அவர்களும்ää இரண்டாம் பிரதியை கல்லூரி நூலகர் திரு.D.இளவழகன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
       மேலும் இக்கல்வியாண்டில் பணிநிறைவு பெறும் கல்லூரி முதல்வருக்கும் பேரா.சு.தமிழாழிக் கொற்கை வேந்தனுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் ஆசிரியரல்லா பணியாளரான திரு.தேவகுரு அவர்களுக்கு நினைவப்பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவினை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்தப்பட்டது.
      வரவேற்புரையில் பேரா.சி.சிவசண்முகராஜா அவர்களும் நன்றியுரை முனைவர்.ம.ஆனந்தராஜ் அவர்களும் நல்கினர். இவ்விழாவின், சிறப்புரையில் முனைவர்.சு.தமிழாழிக் கொற்கை வேந்தன், முனைவர்.க.மனோகரன், பேரா.ரா.ரவி, முனைவர்.ரா.கண்ணன், பேரா.வி.இராயப்பன், பேரா.ரா.பாஸ்கரன், முனைவர்.ச.சச்சிதாநந்தம் முனைவர்.க.முருகதாஸ், முனைவர்.ப.ஷர்மிளா இந்திராணி, முனைவர்.ச.கீதாதேவி, பேரா.க.கீதா, முனைவர்.கே.செந்தில்குமார் மற்றும் முனைவர்.கு.நிர்மல்குமார் உள்ளிட்ட அனைத்து துறைத்தலைவர்களும் பேசினர்.

        இவ்விழாவில் கல்லூரி முதல்வர் “ஆசிரியர் பணி அறப்பணி என்றும், சமூக மாற்றத்தை கொண்டு வருவதில் ஆசிரியர்கள் பெரும் பங்காற்றுகின்றனர்” என்று குறிப்பிட்டார். இறுதியில் கவின் கலை மன்றத்தின மாணவ/மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆசிரியர்களை வாழ்த்தினர்.








Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP