2015-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 4-ஆம் நாள் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா – 2015 (கவின் கலை> விளையாட்டு மற்றும் ஆண்டுவிழா) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாரூபவ் கல்லூரியில் தேசிய தர மதிபீட்டுக்குழுவால் NAAC ‘B’ தரச் சான்றிதழ் உயர்த்தி வழங்கப்பட்ட பின்னர் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும். இவ்விழாவில் பொருளியல் துறைத்தலைவர் முனைவர்.ந.கண்ணன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
2014-2015-ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுத்துறை அறிக்கையினை உடற்கல்வி இயக்குநர் பொறுப்பாசிரியர் முனைவர்.கு.நிர்மல்குமார் அவர்கள் வழங்கினார். அவரது அறிக்கையில் 12-வது திட்ட காலத்தில் நிதி நல்கைக் குழுவிடமிருந்து (ருபுஊ-ளுநுசுழு) விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து லட்சம் மட்டும்) பெறபட்டுள்ளதாக குறிப்பிட்டார். இது ஏழை எளிய மாணவர்கள் விளையாட்டுத்துறையில் மேலும் சாதிப்பதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும்ரூபவ் விளையாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு நவின முறையிலான செயற்கை இழை ஓடுபாதையும்ரூபவ் விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்படும் என்று கூறினார். மிதிவண்டி போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக பந்தைய சைக்கிள்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும்ரூபவ் பல்கலைக்கழக மாநில அளவில் 8 மாணவர்கள் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
கவின் கலை மன்றத்தின் அறிக்கையினை கணிதத்துறைத் தலைவரும் மன்றத்தின் பொறுப்பாளருமான பேராசிரியர் சி.சிவசண்முகராஜா வழங்கினார். இக்கல்லூரி மாணவர்கள் பேச்சுரூபவ் கவிதைரூபவ் கட்டுரைரூபவ் தனிநடிப்புரூபவ் நாடகம்ரூபவ் தனிநடனம்ரூபவ் குழுநடனம் போன்ற பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றுக் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக சூரியன் பண்வலை (Suryan FM) நடத்திய குழு நடனப்போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் சிறப்பாகப் பங்கேற்று ரூ.5,00,000/- பணப்பரிசாகப் பெற்றுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
பெரியார் அரசு கலைக் கல்லூரியின் ஆண்டு அறிக்கையினை முதல்வர் வ.நா.விஸ்வநாதன் வழங்கினார். அவ்வாண்டறிக்கையில் இக்கல்வியாண்டில் பல்வேறு துறைகளின் சார்பாக தேசிய அளவிலான ஏழு கருத்தரங்குகளும் ஒரு பயிலரங்கும் மாதிரி பாராளுமன்றம் ஒன்றும் பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் குறுந்திட்ட ஆய்வினை (ஆiழெச Pசழதநஉவ) மேற்கொள்ள அனுமதியும் நிதியுதவியும் பெற்றுள்ளனர். இவையனைத்திற்கும் மேலாக கல்லூரி முதல்வர் மற்றும்; மூன்று பேராசிரியர்களும்; வெளிநாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து வந்துள்ளனர்.
கல்லூரியில் பணியாற்றும் முதல்வர்ரூபவ் பேராசிரியர்கள்ரூபவ் அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் முழு ஒத்துழைப்பின் பயனாக தேசிய தர மதிபீட்டுக் குழுவிடமிருந்து கல்லூரி ‘B’ தரமும் 2.43 CGPA பெற்றுள்ளது. தற்போது மாணவர்கள் தங்களது திறன் அடிப்படையிலான வேலை வாய்ப்பினைப் பெறும் நோக்கில் (UGC-KAUSHAL) பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் கௌசால் திட்டத்தின் கீழ் 21-புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்குவதற்கான முன் வரைவினைத் தயாரித்து சமர்ப்பித்துள்ளனர். மேலும் வரும் கல்வியாண்டு முதல் கல்லூரியானது தன்னாட்சி தகுதியினைப் பெறுவதற்கான திட்ட முன்வரைவினையும் தயாரித்து சமர்ப்பித்துள்ளது. ஒட்டுமொத்தமாக கல்லூரி ஆண்டறிக்கையானது உயர்க்கல்வியில் உன்னத நிலையினை வரும் கல்வியாண்டு முதல் அடையும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மனித உரிமை எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் கலந்துக் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தரம் பெற்ற மாணவர்களுக்கும் கவின் கலையில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். அவர்தம் உரையில் இந்தியாவில் மனித உரிமைகள் பற்றி விளக்கி கூறினார். இறுதியில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.சு.தமிழாழிக் கொற்கை வேந்தன் நன்றியுரையாற்றினார்.
|
தினமலா் 05.04.2015 ஞாயிறு |
|
தினமலா் 05.04.2015 ஞாயிறு |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக