இந்தியத் திருநாட்டின் 66-வது குடியரசு தின விழா பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
குடியரசு தினவிழா-2015
--------------------------------
இந்தியத் திருநாட்டின் 66-வது குடியரசு தின விழா பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் பொறுப்பு முதல்வரும் பொருளியல் துறை தலைவருமாகிய முனைவர்.ந.கண்ணன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
அவர் பேசும் போது இன்றைய தினத்தில் இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் போற்றிப்பேணும் வகையில் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார். சட்ட மேதை டாக்டர்.அம்பேத்கார் அவர்களின் தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த தினமே இந்தியக்குடியரசு தினமாக அனுசரிக்கப்படுகிறது என்றும் கூறினார். இன்றைய தினத்தில் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் வேளையில் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் மனிதநேயம் காப்பதில் அக்கறை கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார்.
இவ்விழா நிகழ்ச்சிகளை இயற்பியல் துறைப்பேராசிரியர் முனைவர்.திலக்குமார் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும் வணிகவியல் துறைத்தலைவருமாகிய பேராசிரியர்.முனைவர்.க.முருகதாஸ் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா.ஞானாம்பிகை அவர்களும் செய்தனர். இவ்விழாவில் அனைத்துப்பேராசிரியர்களும் அலுவலகப் பணியாளர்களும் பெருந்திரளாக மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக