கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புள்ளியியல் துறை சார்பில் சமூக அறிவியல் ஆராய்ச்சியின் பரிமாணங்களின் பன்முகத் தன்மை, போக்குகள், திறனாய்வு மற்றும் சிக்கல்கள்' என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புள்ளியியல் துறை சார்பில், பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியுடன் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
"சமூக அறிவியல் ஆராய்ச்சியின் பரிமாணங்களின் பன்முகத் தன்மை, போக்குகள், திறனாய்வு மற்றும் சிக்கல்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். புள்ளியியல் துறைத் தலைவர் சச்சிதானந்தம் வரவேற்றார்.
திருச்சி, திருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜானகி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பேராசிரியர் சர்மா, புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் தனவந்தன், மத்திய குழந்தை நல அமைப்பக மனநல நிபுணர் விஜயகுமார், மாநிலக் கல்லூரி சந்திரமோகன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் இளங்கோவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக