கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள் விழா மற்றும் தமிழ் பயிலரங்கம்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள் விழா 20.02.2014 அன்று நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பேராசிரியர் கவிதா வரவேற்றார். நெய்வேலி ஜவகர் கல்லூரி முதல்வர் சந்திரசேகர், உ.வே.சா. படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில், பேராசிரியர்கள் பலர் உ.வே.சா. குறித்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரை சமர்பித்தனர். நிகழ்ச்சியை பேராசிரியர் சியாமளா தொகுத்து வழங்கினார். முன்னதாக தமிழ்த் துறை மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக