கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் முப்பெரும் விழா
கடலூர்:
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
கடலூர், பெரியார் கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் வரலாற்று மன்ற நிறைவு விழா, கல்லூரியில் முதுகலை வரலாறு பாடப் பிரிவு துவக்கியதற்கு நன்றி அறிவிப்பு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் காந்திமதி வரவேற்றார். பல்கலைக் கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் அசோகன் பரிசு வழங்கிப் பேசினார்.
பேராசிரியர்கள் ராயப்பன், பிரபா, தெய்வாம்சம், விஜலட்சுமி வாழ்த்திப் பேசினர். பேராசிரியர் சேதுராமன் விழாவை தொகுத்து வழங்கினார். மாணவர் ஜோதிநாதன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக