கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
கடலூர்:
இலவச மடிக்கணினி வழங்கக் கோரி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் இரண்டாம் நாளாக நேற்று வகுப்பை புறக்கணித்து, கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிவழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலவச மடிக்கணினியை முதுகலை மாணவர்களுக்கும் வழங்கக்கோரி கடலூர் அரசு கலைக் கல்லூரி எம்.காம்., - எம்.எஸ்சி., (முதுநிலை) மாணவ, மாணவிகள் 120 பேர் நேற்று முன்தினம் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாம் நாளாக நேற்று மாணவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில், முதுகலை மாணவர்களுக்கு ஆய்வுப் பணி (பிராஜக்ட் ஒர்க்) ஒரு பாடப் பகுதியாக உள்ளதால், எங்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இலவச மடிக்கணினி பெற்றுத் தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.