கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையம்: போலீஸ் பாதுகாப்பு
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அறைகளில் பாதுகாப்பாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கு கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியிலும், விருத்தாசலம், திட்டக்குடி, தொகுதிகளுக்கு விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியிலும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் தொகுதிகளுக்கு சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் இடங்களுக்கு புதன்கிழமை இரவே கொண்டு வரப்பட்டன.
அந்தத் தொகுதிகளுக்கான அறைகளில் வைத்து, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக