கடலூா் பொியாா் அரசு கலைக் கல்லூாியில ”சர்வதேச யோகா தினம்” 21.06.2015 கொண்டாடப்பட்டது.
சர்வதேச யோகா தினமானது இந்தியாவின் தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா.சபை முதல் யோகா தினத்தைக் கொண்டாட அங்கீகரிக்கப்பட்டு இந்த அங்கீகாரமானது 177 நாடுகளில் ஏற்றுக்கொண்டு இன்று சுமார் 191 நாடுகள் இந்த யோகா தினத்தை கொண்டாடி வருகிறது. அதனடிப்படையில் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் முனைவர்.வ.நா.விஸ்வநாதன் தலைமையில் இன்று 21.06.2015 -ஆம் நாள் காலை 07.15 முதல் 09.00 மணி வரை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் அவர்கள் யோகாவின் சிறப்புகளையும் அதனைப் பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக் கூறி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிரம்மகுமாரி இயக்கத்தின் திரு.P.மு.மோகன்குமார் அவர்கள் ராஜயோகம் மற்றும் தியானப்பயிற்சி பற்றிய செய்தி முறைகளையும் மாணவர்களுக்கு அளித்தனர்.
இந்நிகழ்ச்சி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சர்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இயற்பியல்துறைத் தலைவர் முனைவர்.க.மனோகரன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.சு.தமிழாழிக் கொற்கை வேந்தன் பொருளியல் துறைத்தலைவர் ரா.பாஸ்கரன் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் வீ.பன்னீர்செல்வம் ஆகியோர் யோகா குறித்து உரையாற்றினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு.எஸ்.டேவிட் சௌந்தர் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்